கால் வைத்தால் தகரம் வெட்டும் மேலே பார்த்தால் தலை சுற்றும்!- தென்காசி- ஆலங்குளம் இடையே ஓடும் எமன் பஸ்

தென்காசியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாதாரண பயணிகள் பேருந்து தடம் எண் 27 பி இயக்கப்பட்டு வருகிறது. Tn74n1541 என்ற எண் கொண்ட இந்தப் பேருந்து இயக்குவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. ஆனாலும், அந்த பஸ்சை சீவி சிங்காரித்து செட் பண்ணி ஆங்காங்கே ஓட்டை உடைசல்களை சரி செய்து இயக்கி வருகின்றனர். தென்காசி பழைய பஸ்டாண்டில் இருந்து தினமும் இயக்கப்படும் இந்த பேருந்தில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

இந்த பேருந்தின் மேற்பகுதி தகர்ந்து போய் காணப்படுகிறது. பிளாட்பாரத்தில் உள்ள ஓட்டைகளை ஆங்காங்கே தகரங்களைக் கொண்டு ஒட்டி வைத்துள்ளனர். இந்த தகரங்கள் பயணிகளின் காலையும் அவ்வப்போது பதம் பார்க்கின்றன. தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அரசு பேருந்துகளை சீரமைப்பதற்காக பல நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அப்படியிருந்தும், இது போன்ற தரமற்ற பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது.