தென்காசி : குப்பைக்கு போன முன்னாள் முதல்வர் புகைப்படம்


தென்காசியிலுள்ள, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை சிலர் எடுத்து அருகிலுள்ள குப்பையில் போட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்ற சிலர் அதைப் பார்த்து , மறைந்த முன்னாள் முதல்வருக்கே இந்த நிலைமையா? என்று அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். வீடியோவையும் சமூகவலைத் தளங்களில் வெளியிட்டனர்.

வீடியோ தற்போது வைரலான நிலையில், தகவல் அறிந்து தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வைத்தே, புகைப்படத்தை எடுத்து மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் மாட்ட வைத்தனர். ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பையில் போட்ட அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.