
தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய சரகத்திற்குட்ட தாட்கோ நகரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் கஞ்சா கடத்தி வந்த திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் இருப்பதால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைத்தார். அதன் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் குண்டர் சட்டத்தில் தினேஷை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தினேஷ் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.