
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பின் பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடையிலும் முதல்வர் புகைப்படங்களை ஒட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் மகளிர் அணி இணைந்து வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் இராயகிரி ,வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியத்திலுள்ள மூன்று டாஸ்மாக் கடைகளில் "போதையின் பாதையில் செல்லாதீர் பேரன்பு மிக்க அப்பா" என்ற வசனங்களின் உடைய முதலமைச்சரின் புகைப்படத்தை டாஸ்மாக் வாசலில் ஒட்டினார்கள். புளியங்குடி போலீசார், இவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதனை காவல்துறையினர் தடுக்க முற்பட்டனர். தமிழகத்தில் எத்தனையோ சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை காவல்துறையினர் வைத்து சரி செய்யாமல் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறினர்.