
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் பற்றிய பயிற்சி தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
எஸ்.சி.எஸ்.பி. என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சியின் போது , இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயிர் மாற்று தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு சாண எரிவாயு உற்பத்தி, சூரிய மின் உலர்த்தியின் செயல்பாடுகள், சூரிய அடுப்பு, சூரிய மின்னாக்கி, உயிர்வேக எரிவாயு கலன் உள்ளிட்ட ஆற்றல் உற்பத்தி உபகரணங்கள் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சரவணப்பிரியா , கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி, பேராசிரியர்கள் ஸ்ரீ லாவண்யா, குமரேசன், சிவசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி நிறைவின் போது பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக சூரிய மின்விளக்கு வழங்கப்பட்டது.