
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இடையர்தவணையில் சிற்றாறு உள்ளது. இங்கு, ஏராளமானோர் வலை வீசி மீன் பிடிப்பது வழக்கம். அப்படி, வீசப்பட்டிருந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி கிடந்தது. இதை கண்ட மீனவர் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து, சுரண்டை தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் பாலச்சந்தர், ரவீந்திரன் சாமி, திலகர் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டனர். இந்த மலைப்பாம்பு 10 அடி நீளம் இருந்தது. தொடர்ந்து, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு மலைப்பகுதில் விடப்பட்டது.