தென்காசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடந்த கும்பாரிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
கும்பாதிஷேகத்துக்காக கடந்த 3-ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. 6 கால யாக சாலை பூஜையின் போது, 91 ஹோம குண்டங்களில் 250 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மூன்று நாட்கள் 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து? இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
9 நிலைகள் கொண்ட 175 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ராஜகோபுரத்தின் மேல் உள்ள கலச கும்பத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக ம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர், ஸ்ரீஉலகம்மன், முருகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ள கருவறையின் மேல் பகுதியில் உள்ள விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, அந்த நீரை 33 கம்பரசர் பைப்புகள் மூலம் ஆலயத்தின் முன்பு குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மீது தெளித்தனர்.
19 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதாவது, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 1,090 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் ரத வீதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க ஃபேஸ் டிடக்க்ஷன் கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டிருந்தது .இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்குழு உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்,எஸ்.பி.அரவிந்த்,இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி,எம்.பி,எம்.எல்.ஏக்கள் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.













