காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் : செய்தியாளர்களை விமானத்தில் இருந்து தரை இறக்கிய பின்னணி என்ன?

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் விஐபி, விவிஜபி அனுமதி சீட்டு இரண்டு வண்ணங்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கான அனுமதி சீட்டு தனியாகவும் வழங்கப்பட்டது. கோயில் பிரகாரத்தில் இருந்து மேல் தளத்திற்கு செல்லும் இடத்தில் அனுமதி சீட்டு பெற்றவர்கள், பெறாதவர்கள் ஒரு சேர குவிந்ததால் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மேலே ஏறுவதில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. செய்தியாளர்கள் எத்தனை பேர் தான் வருவீர்கள் ? என்று அதிகாரிகள் கேள்வி கேட்டனர். காசிவிஸ்வநாதர் விமான பகுதியில் பட்டாச்சார்யார்கள், அறங்காவலர் குழுவினர் செய்தியாளர்கள் இருந்த நிலையில் அதன் பிறகு வந்த அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி மற்றும் எம்எல்ஏ, எம் பி, திமுக மாவட்ட செயலாளர், அதிகப்படியான ஆட்களை மேலே ஏற்றி விட்டனர். பிறகு, அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் திமுகவின் ஆளுங்கட்சி நபர் மேலே அதிக நபர்கள் இருப்பதாக கூறி, பத்திரிகையாளர்களை கீழே இறங்க வைக்கும்படி சொன்னார். இதையடுத்து, ஆட்சியர் கேட்டுக் கெண்டதால் செய்தியாளர்கள் கீழே இறங்கினர். யார் யாருக்கு எங்கேங்கே இடம் என்பதை சரியாக செய்யதாக காரணத்தால்,செய்தியாளர்கள் செய்தி சேகரிக்காமல் கீழே இறங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் கெடுபிடி காட்டிய மாவட்ட நிர்வாகம் ஆளுங்கட்சியினரை கண்டு கொள்ளவே இல்லை என்று செய்தியாளர்கள் புலம்பினர்.