
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் தெற்குமேடு பகுதியை சேர்ந்த கண்ணகி (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்த நிலையில், இருவரும் பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கண்ணகி ஆசைப்பட்டார் என்பதற்காக அழகான வீடு ஒன்றை திருமலைக்குமார் கட்டியுள்ளார். கண்ணகி என்ன சொல்கிறாரோ அதையெல்லாம் கேட்கும் நல்ல பையனாக திருமலைக்குமார் இருந்து வந்துள்ளார். திரென, கண்ணகி மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை திடீரென திருமலைக்குமாரை ஒதுக்கியுள்ளார்.
இது தொடர்பாக, திருமலைக்குமார் கேட்டபோது உன்னுடன் பழக எனக்கு விருப்பமில்லை என்ற வார்த்தையும் கண்ணகி கூறியுள்ளார். இதனால் திருமலைக்குமார் கடுமையான மன வேதனைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், மனவிரக்தியில் இருந்த திருமலைக்குமார் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கண்ணகி வீடு தேடி சென்று அவளை சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த கண்ணகியை மீட்டு போலீசார்மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் கண்ணகி அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலைக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உருகி உருகி காதலித்த காதலி தன்னை வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரத்தில் காதலன், காதலியை அரிவாளால் வெட்டிய சம்பவம் புளியரைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.