
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒருவர் அமராவதி நாடார். அங்குள்ள , சங்கரநாராயணர் சுவாமி கோவிலின் அறங்காவலராக தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றி, அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவர். இவரது மகன் பிரகாஷின் மகன் ஏ.பி.சரபோஜி என்பவர் இந்திய விமானப்படையில் ரபேல் பிரிவில் விமானியாக பணியாற்றி வருகிறார்.
தற்போது , பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல் நடத்தியது. இதில், கடந்த 7ம் தேதி இரவு இந்தியா பாகிஸ்தானை தாக்கிய ரபேல் குழுவில் ஏ.பி. சரபோஜியும் இடம் பெற்றிருந்தார். இவர் , தான் ஓட்டி சென்ற விமானத்தின் மூலம் பாகிஸ்தானில் இயங்கிய தீவிரவாத முகாமில் முதல் குண்டை வீசினார்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த பின்னர், இவர் தனது ரபேல் விமானத்தில் பத்திரமாக தாய் நாடு திரும்பினார். இவருடன் சென்ற மற்ற விமானிகளும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு பத்திரமாக தாய்நாடு திரும்பினர்.