பள்ளி தாளாரிடம் 60 ஆயிரம் லஞ்சம் கேட்ட தென்காசி கல்வி அலுவலக ஊழியர் அதிரடி கைது

tenkasi-education-office-employee-arrested-for-demanding-rs-60-000-bribe-from-school-principal

தனியார் பள்ளி தாளாளரிடம் ரூ.60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் அருகே செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சில காலம் பணிபுரிந்துள்ளார். இதற்காக, பணி அனுபவ சான்று கேட்டு பள்ளியின் தாளாளரான நாகராஜ் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். தாளாளர் ஆசிரியரின் பணி அனுபவ சான்றினை தயார் செய்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலத்தில் (தனியார் பள்ளி) சமர்பித்துள்ளார்.

இது தொடர்பாக, தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை சந்தித்து பேசிய போது , பணி அனுபவ சான்றினை வழங்குவதற்கு லஞ்சமாக பணம் ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார். லஞ்சபணம் கொடுக்க விரும்பாத தாளாளர் நாகராஜ் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்துள்ளர். தொடர்ந்து, அவர்கள் அறிவுரையின்படி, ரசாயனம் தடவப்பட்ட பணம் 60 ஆயிரத்தை தாளாளர் நாகராஜ் சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்காவல் கண்காணிப்பாளர் பால்சுதர் மற்றும் காவல் ஆய்வாளர்ஜெயஸ்ரீ ஆகியோர் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.