விடுமுறை தினம் : குற்றாலத்தில் குவிந்த கூட்டம்

Holiday-Crowd-gathers-at-Courtallam

விடுமுறை காரணமாக தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது.

குடும்பங்களுடன் வந்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளிக்கின்றனர். இதனால், விற்பனை அதிகரிப்பதால், குற்றாலத்தில் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.