
மேலே படத்தில் தெய்வீக கலையோடு இருப்பவர் பெயர் நீலகண்டன் (58). சுரண்டை பகுதியை சேர்ந்த தென்காசி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர். இவர் தன் குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்ற போது, அங்கு தனியே இருந்த நண்பரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லை, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார்.
15 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து, தந்தை சென்ற மாதம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றம் உடனே அவரை கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில், நீலகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த நீலகண்டனை, மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.