
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மின்தடை ஏற்படுவதால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.
நேற்று ( ஜூன் 9)நள்ளிரவில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.நோயாளி ஒருவர் இந்த சமயத்தில் தனது செல்போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சிகளில் இருளில் மூழ்கிய மருத்துவமனை , சிகிச்சை அறையில் நோயாளிகள், உடன் இருந்தவர்கள் மொபைல் போன் லைட் வெளிச்சத்தில் மின்விசிறி இல்லாமல் நள்ளிரவில் தூக்கமின்றி சிரமத்திற்குள்ளான காட்சிகள் பதிவாகியுள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தடையில்லா மின்விநியோகம் வழங்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக உள்ளது.