சங்கரன்கோவில் திமுக சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோதாவில் குதித்த சொந்த கட்சி கவுன்சிலர்கள்

no-confidence-motion-against-dmk-chairman-in-sankarankovil-own-party-councilors-jump-in-the-fray

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் உள்ளனர். தி.மு.க. 9 அதன் கூட்டணியான ம.தி.மு.க. 2, காங் 1, எஸ்.டி.பி.ஐ. 1 மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய சேர்மன் தேர்வில் இரு தரப்பு போட்டியாளர்களுக்கும் சம வாக்குகள் கிடைக்க, குலுக்கல் முறையில் தி.மு.க. வை சேர்ந்த உமாமகேஸ்வரி சேர்மனாக அறிவிக்கப்பட்டார்.

சேர்மன் உமாமகேஸ்வரி மொத்தக் கவுன்சிலர்களின் வார்டுகளில் கட்டமைப்புகள், தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. தன்னையே வளர்த்துக் கொள்கிறார் என்று குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு. அ.தி.மு.க.கவுன்சிலர்கள் மட்டுமல்ல சொந்த கட்சியான தி.மு.க.கவுன்சிலர்கள் 11 பேர் கைகோர்த்து 2022ம் ஆண்டு சேர்மன் உமாமகேஸ்வரியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், தீர்மானம் வெற்றி பெறவில்லை. அதன்பின்னரும், வார்டு பணிகள் சுறு சுறுப்பாக நடக்கவில்லை.

அதனால், மீண்டும் சேர்மன் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சேர்மன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், அவர், தன் மீதான மெஜாரிட்டியைக் ஒரு வாரத்தில் கவுன்சிலைக் கூட்டி நிரூபிக்கவேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறோம் என்று திமுக கவுன்சிலர்களே கோதாவில் குதித்துள்ளனர். அனைத்து வார்டுகளின் நிலைமையும் மோசமாக இருப்பதால், கவுன்சிலர்கள் கட்சி பாகுபாடில்லாமல் கை கோர்த்து ஒன்றாக நிற்கிறார்கள்.ஒரு வாரத்தில் கவுன்சிலை கூட்டி மெஜரிட்டிய நிரூபிக்க வேண்டும் என்று கெடு வைத்து நகராட்சி கமிசனரிடம் கவுன்சிலர்கள் மனுவும் கொடுத்துள்ளனர்.