பாவூர்சத்திரம் தொப்பி வாப்பா கடையில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு

food-poisonin-issue-in-pavurchathiram

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மேலப்பாவூர் சாலையில் தொப்பி வாப்பா பிரியாணிகடை உள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கடையில் 9 பேர் பக்கெட் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதை சாப்பிட்ட 9 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இங்கு, குருசாமிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் குடும்பத்தினர் 4 பேர் இந்த கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் ஒவ்வாமை காரணமாக இவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.