.jpg)
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் அருகேயுள்ள பள்ளியில் படிக்கும் ப்ளஸ் டு மாணவன் ஒருவன் அரிவாளுடன் பள்ளிக்கு வந்துள்ளான். புத்தக பைக்குள் அரிவாளை வைத்திருந்த அந்த மாணவன், அதை காட்டி சக மாணவனை மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, மாணவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவன் மீது சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் திருநெல்வேலியில் தனியார் பள்ளியில் மாணவன் , புத்தகப்பைக்குள் அரிவாளை வைத்து கொண்டு வந்து சக மாணவனை வெட்டியது குறிப்பிடத்தக்கது.