ஆலங்குளத்தில் ஆன்லைனில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்து திரும்ப வராததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ., சர்ச் தெருவைச் சேர்ந்த அருண்பாண்டி மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27. இந்த தம்பதிக்கு பிரதிக்க்ஷா , தேசிகா , தர்சிகா என்ற மகள்களும் மற்றும் 3 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளனது ஆகிய மகள்கள், ஜெகதீஸ் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளனர்.
அருண் பாண்டி ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளி. ஸ்டெல்லா எஸ்தர் சில மாதங்களாக வாட்ஸ்அப் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் ,ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பணம் முதலீடு செய்தார். தொடக்கத்தில் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதனால, அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு எஸ்தர் ஸ்டெல்லா ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்தார். ஆனால் பணம் திரும்ப வரவில்லை. ஆன்லைன் நிறுவனத்தில் நிதி நிறுவனத்திடம் பேசியும் பலன் இல்லை.
தொடர்ந்து, மனமுடைந்த ஸ்டெல்லா எஸ்தர் தாய் வீட்டிற்கு சென்று 4 குழந்தைகளை விட்டு விட்டு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர்.













