ஆலங்குளம்: பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் விபரீதம்

alankulam-9th-grade-student-suicide

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவரது மகன் நகுல் சுவதீப்(13) நகுல் சுவதீப் ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் நகுல் சுவதீப் கபடி விளையாட சென்று விட்டு, இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளான். இதனால் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை.

இதை, பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அக்கம் பக்கத்தினர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்லததை பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிலார்குளம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

READ MORE ABOUT :