செங்கோட்டை நகராட்சி எல்லை நுழைவுவாயில் கட்டடத்தை இடிப்பது தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நுழைவாயில் அமைந்துள்ளது . இது ,150 ஆண்டு காலம் பழமையானது. அப்போதைய கேரள அரசால் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட துவாரபாலகா்கள் சிலையுடன் கூடிய நுழைவு வாயில் இது. இந்த நுழைவு வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது.
பழமையான நுழைவு வாயிலை இடிப்பது தொடர்பாக நேற்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகரமன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில் நுழைவு வாயிலை இடிப்ப தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் நுழைவு வாயிலை இடிக்க கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதனால், நகர்மன்ற தலைவர் ராமலஷ்மி மன்ற அரங்கில் இருந்து வெளியேறினார். நுழைவுவாயிலை முற்றிலும் இடிக்காமல் பராமரிக்க வேண்டுமென அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













