தென்காசி மாவட்டம் வல்லத்தை சேர்ந்த சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ரமேஷ் என்பவருடன் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், காதலனுடன் பைக்கில் சென்ற 9-ம் வகுப்பு சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, காதலனை கைது செய்ய வலியுறித்தி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மது அருந்திவிட்டு மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற காதலன் ரமேஷ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது













