தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவரின் பயண விவரங்களை பார்ப்போம். தமிழக முதல்வர் இன்று (அக் 28) மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு மதுரை வந்தடைகிறார். பின்னர், இரவு 9.30 மணியளவில் கோவில்பட்டி செல்கிறார். அங்கு, இளையரசனேந்தல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர், அங்கிருந்து நெல்லை மாவட்டம் முக்கூடல் சென்று தங்குகிறார்.
மறுநாள் (அக்.29) காலை 11 மணிக்கு மணிக்கு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 11.30 மணிக்கு அனந்தபுரம் சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 12.45 மணிக்கு அமர் சேவா சங்கம் சென்று பார்வையிடுகிறார்.பின்னர், மதியம் 1.30 மணிக்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் சென்று தங்குகிறார், மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு , இரவில் மதுரை சர்க்யூட் ஹவுஸ் சென்று இரவு தங்குகிறார். அடுத்த நாள் (அக்.30) தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.













