மெர்க்கன்டைல் வங்கியில் 48 ஆயிரம் சம்பளத்தில் பணி வேண்டுமா? இளைஞர்களே உஷார்

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. மெர்கன்டைல் வங்கியில் ஏற்படும் கால்பணியிடங்கள் குறித்து உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது காலியாகவுள்ள சீனியர் வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான 124 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் டிகிரி பெற்றிருந்தால் போதுமானது. 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்வ்வி பெற்றிருக்க வேண்டும். தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்குட்பட்டவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்கள் ஆனலைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். வங்கியின் இணையதளமான https://www.tmbnet.in/ - ல் விண்ணப்பிக்கலாம். மார்ச் 16 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.