நாசரேத்தில் களை கட்டிய மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நாசரேத் நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகரச் செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். இதை முன்னிட்டு நாசரேத் கே.வி.கே சாமி சிலை, காமராஜர் பேருந்து நிலையம், நாசரேத் சந்தி பஜார் போன்ற இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்க பட்டது. தொடர்ந்து, திருமறையூர் முதியோர் இல்லம், கருணை இல்லம், பிரகாசபுரம் சர்வைட் கான்வென்ட் சிறுவர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலணியில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்க பட்டது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.