மூக்குப்பீறியில் தமிழ் மன்ற கூட்டம் : தேநீர் நேரம் சிறுகதை திறனாய்வு

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ் மன்ற கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் தேவதாசன் ஞான்ராஜ் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி சிறுகதை எழுத்தாளர் சாந்தி பிரபு எழுதிய தேநீர் நேரம் என்ற சிறுகதை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து சாந்தி பிரபு ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் எழுத்தாளர் கண்ணகுமாரவிஸ்வரூபன், ஒய்வு பெற்ற தாசில்தார் அய்யாக்குட்டி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் நாசரேத் நூலக வாசகர் வட்ட துணை தலைவர் கொம்பையா, சிவா, ஜான் பிரிட்டோ, மந்திரம், பொன்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.