நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம்

நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.

நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கொம்பையா‌ வரவேற்றார். கவிஞர் சிவா, கவிதாயினி நேசிகா ஆகியோர் மகளிர் மேன்மை குறித்து கவிதை வாசித்தனர்.இலக்கியத் தேன் என்ற தலைப்பில் தமிழ்ச் செம்மல் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். தேரி இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் கருத்துரை வழங்கினார்.மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியா வாழ்த்திப்பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் காசிராசன், மருத்துவர் விஜய் ஆனந்த், தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார், ஒய்வு பெற்ற பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணிமொழிச் செல்வன், சொற்பொழிவாளர் வேல்முருகன், ஆசிரியர் செல்வின், கிறிஸ்டோபர், சுரேஷ், மந்திரம், ஜான் பிரிட்டோ,கிங்ஸ்லி, ரத்தினசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.