சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன. தினமும் சென்னை- தூத்துக்குடி இடையே 4 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 4 விமானங்களும் நாள் ஒன்றுக்கு 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமானங்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை காலங்கள் போன்றவைகளில் விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. . இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அதிக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 30ம் தேதியில் இருந்து, சென்னை- தூத்துக்குடி இடையே மேலும் 2 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 2 விமானங்களும், 4 விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல தூத்துக்குடி-பெங்களூரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படவுள்ளது. கூடுதல் விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்குகிறது. இதனால், இனிமேல் சென்னை- தூத்துக்குடி- சென்னை இடையே, ஒரு நாளில் 12 விமானங்கள் இயக்கப்படும். அதில் 6 விமானங்கள், சென்னை-தூத்துக்குடி இடையேயும், 6 விமானங்கள், தூத்துக்குடி- சென்னை இடையேயும் இயக்கப்படும். இதேபோல், சென்னை- திருச்சி- சென்னை விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன.