ஸ்ரீவைகுண்டம் அருகே வெட்டப்பட்ட மாணவர்: திருமாவளவன் எழுப்பும் பல சந்தேகங்கள் என்ன?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவன் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது வழிமுறைத்த மூன்று பேர் கொண்ட கும்பல் சரமரியாக வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சரமரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவனை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சாதி வெறி தீய சக்திகளால் கொடூரமாக தாக்கப்பட்டு இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மாணவர். இடது கையில் சுண்டு விரலை இணைத்து தைக்க முடியவில்லை . அவருதுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை.ரத்தை இழப்பு அதிகமாக இருக்கிறது. மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவரை காப்பாற்ற முயற்சி செய்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. படிப்பிலும் விளையாட்டில் தீவிரமான ஆர்வம் உள்ளவர்

கபடி குழுவில் இணைந்து வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார். வெற்றியை கொண்டாடியதை பொறுத்துக் கொள்ள முடியாத கும்பல் அவரை ஒரு மாதமாக பின்தொடர்ந்து தேர்வு எழுத வந்த நிலையில் அவரை கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள். கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் பின்னால் ஒரு சிலர் உள்ளனர். வெட்டுவதற்கு இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள்
வெட்டி முடித்த பின்பு காரில் ஏறி சென்று இருக்கிறார்கள் . வெட்டுவதற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தது யார் வெட்டி காயப்படுத்திய பின்பு காரில் அழைத்துச் சென்றவர்கள் யார் என்பதை புலனாய்வுத்துறை விசாரணை செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு இழப்பு வழங்க வேண்டும் . அவனது கல்வி பாதிக்கப்படாதவாறு அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் தான் பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். அவர்களும் அச்சத்தில் பீதியில் இருக்கிறார்கள் . மாணவனின் குடும்பத்திற்கு அங்கு பாதுகாப்பு இல்லை .அவர்கள் இந்த நேரத்திலும் தாக்கப்படலாம்.எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்துகிறோம். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடைபெறும் இது போன்ற வன்முறையை தடுக்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை ஈடுபடுவதற்கு சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பில் இருந்து காதல் விவகாரத்தில் மாணவருக்கு வெட்டு விழுந்ததாக தவறான செய்தியை பரப்புகிறார்கள். யாரை காப்பாற்ற காவல்துறை இப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. இந்த வழக்கை விசாரிக்க கூடிய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரின் கண்காணிப்பில் இந்த விசாரணை நடைபெற வேண்டும். நீதியரசர் சந்துருவின் தலைமையிலான அறிக்கையை அலசியப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.