தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை சென்னையில் சுட்டு பிடித்த போலீஸ்


சென்னை வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா கைது செய்யப்பட்டார். போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால், ரவுடியை காலில் சுட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியே சேர்ந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது, ஹைகோர்ட் மகாராஜாவும் ஆதம்பாக்கத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். தொடர்ந்து, கிண்டியில் வைத்து அவரை சுட்டு பிடித்தனர். தற்போது, ஹைகோர்ட் மகாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.