நாசரேத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா : போலீஸ் இன்ஸ்பெக்டர் திறந்து வைத்தார்!


நாசரேத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று (மார்ச் 21 )நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மகாராஜா தலைமை வகித்தார். நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ், சங்க உறுப்பினர்கள் ஸ்டான்லி, கார்த்திக், கணேசன், தங்கராஜ், ஜெகன், மனோகரன், சித்திரைபாண்டி, ஏனோக் மற்றும் காவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கோடை வெயிலில் இந்த நீர், மோர் பந்தலை மக்கள் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.