மூக்குப்பீறியில் மாற்றுத்திறனாளி பெண் குளித்ததை எட்டிப்பார்த்த இளைஞர்: நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு


நாசரேத் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் குளிக்கும்போது எட்டிப் பார்த்ததாக இளைஞருக்கு 15 மாசம் சிறைத்தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் (வயது 35). கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இவர் மீது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் குளிக்கும் போது எட்டிப் பார்த்தாக நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் பதிவு செய்து அவரை கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வருடமாக நடந்து வந்தது. ஜெபஸ்டின் தரப்பில் தான் அப்பாவி என்று விசாரணையின் போது கூறினார். வழக்கை விசாரித்த சாத்தான்குளம் கூடுதல் பொறுப்பு நீதிபதி வரதராஜன் மார்ச் 21 ஆம் தேதி அளித்தார். ஜெபஸ்டினின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதி, மார்ட்டின் என்ற ஜெபஸ்டினின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 15 மாதம் சிறை தண்டனையும், ரூ, 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில், ஜெபஸ்டின் குடும்பத்தினர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூறியுள்ளனர்.