நாசரேத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள திருமறையூரில் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேர்சில் தலைமை தாங்கினார். மகளிர் அணிச் செயலாளர் இன்பராணி, திருமறையூர் செவித்திறன் குறையுடையோர் பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி கரோலின், திருமறையூர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி மெட்டில்டா, மாவட்ட பொருளாளர் அழகு லட்சுமி, நாசரேத் பேரூராட்சி மன்றத் தலைவர் நிர்மலாரவி, சாத்தான்குளம் மிக்கேல் சிறப்புப் பள்ளி தாளாளர் சுசீலா மிக்கேல், நல்லாசிரியர் அன்பாய் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அமைப்புத் தலைவி சுகந்தி வரவேற்றார். தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ - மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.