சிலம்பம் சுற்றுவதில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை

Tiruchendur-Alan-Tilak-Karate-School-students-achieve-record-in-circling-the-Silambam

கொடைக்கானலில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அந்த வகையில், திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவி சலைத்மா மற்றும் ரிஷித் குமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் ஆடி சாதனை படைத்தனர்.

இந்த மாணவர்களை அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பயிற்சியாளர் கராத்தே டென்னிசன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை வெகுவாக பாராட்டினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன்,பால் துரை சுரேஷ்,பெரியதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.