நாளை காலை திருமணம்... இன்று மணப்பெண் எடுத்த முடிவு

wedding-tomorrow-morning-the-bride-s-decision-today

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், மேலமடம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சரண்யா (23). இவர் பசுவந்தனை அருகேயுள்ள போடிநாயக்கனூரில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சரண்யாவின் பெற்றோர் இறந்து விட்டனர். இதனால், சகோதரி வீட்டில் வசித்து வந்தார்

சரண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக செல்லப்படுகிறது. வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது அக்கா, வேறு ஒருவருடன் திருமணம் பேசி முடித்துள்ளார். நாளை (25ஆம் தேதி) திருமணம் நடக்க இருந்தது. எனினும், சரண்யா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இது தொடர்பாக சகோதரிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரண்யா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.