தூத்துக்குடி: பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் சுற்றிய ரவுடி... துப்பாக்கியை எடுத்த போலீஸ்

thoothukudi-rowdy-man-with-a-arivaal-roamed-around-the-bus-stand-police-took-his-gun

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரிவாளுடன் சுற்றிய ரவுயை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று (மே24) ஆயுதங்களுடன் மர்ம நபர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தனிப்படை காவல் ஆய்வாளர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் அங்கு சென்றனல். அங்கு, வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி கொண்டிருந்த ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த அந்தோணி மைக்கேல் சுகந்தன் (40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து கைதும் செய்தம். அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.