கோவில்பட்டியில் பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை

two-people-including-a-woman-hacked-to-death-in-kovilpatti

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் என்பவரின் மகன் பிரகதீஸ்வரன் (22), இவர் நேற்று இரவு கடலையூர் ரோட்டில் உள்ள டாஸ்மார்க் கடை அருகில் நடந்து சென்று கொண்ருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்னர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்த ஆனந்த் மனைவி கஸ்தூரி (45) என்பவரை வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது அண்ணன் செண்பகராஜ் (50) என்பவருக்கும் வெட்டு விழுந்தது. வெட்டப்பட்ட கஸ்தூரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோவில்பட்டியில் ஒரே நாளில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து ஆண் மற்றும் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.