ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை அமைச்சர் கீதாஜீவன் சொல்வது என்ன?

gnanasekaran-sentenced-to-30-years-what-does-minister-geethajeevan-say

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை வழங்ககப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. தமிழக முதல்வர் தலையிட்டு குற்றவாளியை கைது செய்து விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு 5 மாதத்தில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது.

பெண்கள் தங்களுக்கு இழக்கப்படும் கொடுமைகளுக்கு தைரியமாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். பெண்களுக்கு இது ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார்.