
திருச்செந்தூரில் ஆசிரியர் திட்டியதால், பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் செந்தில் குமரன் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தன மாணவன் ஒருவன், சரியாக வீட்டு பாடம் எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர் அந்த மாணவனை திட்டியுள்ளார்.
படிப்பு வரவில்லையென்றால், செத்து விடு என்று ஆசிரியர் கடினமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. சக மாணவர்கள் முன்னிலையில், ஆசிரியர் இப்படி திட்டியதால் மாணவன் அவமானமடைந்துள்ளான்.
இதனால்,வேதனையடைந்த மாணவன் பள்ளிகட்டத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், படுகாயமடைந்த மாணவனை மீட்டு ஆசிரியர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். திருந்செந்தூரில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.