பனை மரம் ஏறி கள் சேகரித்த சீமான்... பெரியதாழையில் பரபரப்பு

naam-tamizhar-protest-in-pariyathazhai

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகேயுள்ள பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் இன்று( ஜூன் 15)நடந்தது.

இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். சீமான் பனைமரம் ஏறி கள் குடிக்க ஏதுவாக கம்புகள் கட்டி பனை மரம் தயாராக வைக்கப்பட்டிருந்தது.

பனை மரம் ஏறி அனுபவம் இல்லாத சீமான் பனை ஏறுவதை பார்க்க ஏராளமான மக்கள் கூடினர். இந்த நிலையில், பெரியதாழைக்கு வந்த சீமான் பனை மரத்தில் அமைக்கப்பட்டிருந்த படிகளில் ஏறி பனைமரத்தின் உச்சியை அடைந்தார். பின்பு, அங்கு வைக்கப்பட்டிருந்த களயங்களில் இருந்த கள்ளை சேகரித்து விட்டு கீழே இறங்கினார்.