பரமன்குறிச்சி: எனது முடிவுக்கு நான்கு ஆசிரியர்களே காரணம் - மாணவன் விபரீதத்தால் தாய் கண்ணீர்

student-suicied-in-paramankurichi

பரமன்குறிச்சியில் வீட்டுப்பாடம் எழுதி வராததால் ஆசிரியர் அடித்ததால் 10 வகுப்பு மாணவன் தனது சாவுக்கு நான்கு ஆசிரியர்கள் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (15). இவர் பரமன்குறிச்சி கஸ்பாவிலுள்ள அரசு உதவி பெறும் கே.கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.

நேற்று வீட்டுப்பாடம் எழுதி வராததால் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா(எ) ஞானசுந்தரி மாணவனை கையில் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மாணவனின் வீட்டிலும் ஆசிரியை தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி, மற்றும் தலைமை ஆசிரியர் சத்யா (எ) ஞானசுந்தரி ஆகிய நான்கு பேர்தான் காரணம் கடிதம் எழுதி சட்டை பையில் வைத்துவிட்டு, நேற்று இரவு வீட்டில் சேலை மூலம் தூக்கிட்டு உள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருச்செந்தூர் தாலுகா போலீசார் மாணவன் எழுதிவைத்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் முத்துகிருஷ்ணனை அடித்த நான்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.