தூத்துக்குடியில் குடிமைப் பொருள் விநியோக அட்டைகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு வழங்கினார்.தமிழகத்தில் மலிவு விலையில் குடிமைப் பொருட்களை தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கி வருகிறது. இதற்காக கடந்த ஆறு மாத காலமாகவிண்ணப்பித்தவர்களுக்கு குடிமைப் பொருட்களை பெறுவதற்காக ரேஷன் கார்டு தயார் செய்யப்பட்டு வந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் 478 பேருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் பிரிவு வட்டாட்சியர் ஞானராஜ் உள்ளிட்டவர்கள் அப்போது உடன் இருந்தனர்.
கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்தவர்கள் ரேஷன் கார்டு கிடைத்த மகிழ்ச்சியில் அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.










