புதுக்கோட்டையில் மனைவிக்கு கொடுமை... கணவருக்கு சிறைத் தண்டனை

husband-sentenced-to-prison-for-abusing-his-wife-in-pudukkottai

புதுக்கோட்டையின் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடு கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சிவா. இவரை கடந்த 2014 ஆம் தனது மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் நேற்று சிவாவுக்கு 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம் விதித்தார்.

வழக்கை சிறப்பாக விசாரணை நெய்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் ஆனந்த ஜோதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.