திருமணத்தை மீறிய உறவு... வல்லநாடு டாஸ்மாக் கடை முன்பு உயிரிழந்த இளைஞர்

youngster-murder-in-vallanadu

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இரவில் வல்லநாட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த ஒருவர் முருகேஷை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர், உயிரிழந்தார். முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த கொம்பையா என்பவர்தான் முருகேஷை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, கொம்பையாவை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், “என் வீடு டாஸ்மாக் கடை இருக்கும் தெருவில் உள்ளது. நான் வெளியூரில் லாரி டிரைவராக இருக்கிறேன். நானும் எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம்.

முருகேஷ் என் மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்தார். அவரை அழைத்து மனைவியுடனான பழக்கத்தை கைவிடும் படி கூறினேன்.கடந்த 17-ம் தேதி இரவு டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திக் கொண்டிருந்த முருகேஷிடத்தில், இனிமேல் என் மனைவியுடன் பழக வேண்டாம் எனக் கூறினேன். அதற்கு முடியாது என்று அலட்சியமாக கூறினார். உடனே வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து முருகேஷை வெட்டினேன்.” என்று தெரிவித்துள்ளார்.