மெஞ்ஞானபுரம் அருகே தம்பி பேசாததால், 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அத்திமரப்பெட்டி வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது, மூத்த மகளான ரேவதி புஷ்பத்திற்கும் (30), மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள திருராமநல்லூரை சேர்ந்த செம்புலிங்கம் என்பவருக்கும்4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ½ வயதில் சுபிக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
தற்போது ரேவதி புஷ்பம் இரண்டாவதாக 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். ரேவதி புஷ்பத்தின் தம்பி நாகார்ஜூன் (18) திருராமநல்லூரில் அக்கா வீட்டில் தங்கியிருந்து திருச்செந்தூரிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறாா். இந்த நிலையில் அக்காள், தம்பி இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இருவரும் பேசாமல் இருந்து வந்தனராம். தம்பி தன்னுடன் பேசாமல் இருந்ததால் ரேவதிபுஷ்பம் சோகத்தில் இருந்துள்ளார்.
மனவேதனையில் இருந்த அவ்ர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மெஞ்ஞானபுரம் போலீசாார் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரேவதி புஷ்பத்துக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.










