தூத்துக்குடியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அடையாள அட்டை செல்வபெருந்தகை வழங்கினார்

selva-perundhagai-handed-over-identity-cards-to-congress-workers-in-thoothukudi

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா புதுக்கிராமத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை அவர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டைகள் வழங்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் க்ட்சி துணைத் தலைவரும் நெல்லை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான.ராபர்ட் புரூஸ் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.