திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட தமிழகத்தில் ஒரே நாளில் 113 கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

Kumbabhishekam-to-be-performed-tomorrow-at-113-temples-in-Tamil-Nadu-iincluding-Tiruchendur-Murugan-Temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை7) காலையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கும்பாபிஷேகம் நடைபெறும் 3 ஆயிரத்து 207-வது கோவிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மட்டும் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட 113 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு காவல் துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தீர்த்தம் ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெறயிருப்பதால் நாளை பகலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பத்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னதானம் கொடுக்கப்படும் இடங்கள்:

1. டி.பி ரோடு: செந்திலாண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

2. தூத்துக்குடி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் (ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம் & JJ நகர் பார்க்கிங்)

3. திருநெல்வேலி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் வியாபாரிகள் சங்க பார்க்கிங் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்.

4. பரமன்குறிச்சி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் & FCI குடோன் அருகிலுள்ள பார்க்கிங் (சர்வோதயா அருகில்).