சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீர் கோளாறு ... 70 பேர் உயிர் தப்பினர்

a-spicejet-flight-from-chennai-to-thoothukudi-sudden-in-problem-70-people-escaped-unhurt

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று( ஜூலை 6)காலை 10 மணிக்கு ஸபைஸ் ஜெட் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. விமானத்தில் 65 பயணிகள் 5 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து விண்ணில் எழும்பியதும் விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

தொடர்ந்து, பறந்தால் பெரும் விபத்து நேரிடும் என்பதை அறிந்த அவர் உடனடியாக, செனனை விமான நிலையத்தில் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார். இதையடுத்து, விமானம் மீண்டும் சென்னை உள்நாட்டு விமானத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், விமான பொறியாளர்கள் விமான கோளாறை சரி செய்து வருகின்றனர்.