விண்ணை பிளந்த அரோகரா கோஷம்... திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்

tiruchendur-temple-kumbabishekam

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. விண்ணை பிளந்த அரோகரா கோஷத்துடன் தமிழ்முறைப்படி, கும்பாபிஷேகம் நடந்தது . பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உற்சாகமாக கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்படுகிறது. பல இடங்களில் எல்.இ.டி டிவிக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் எளிதாக கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆன்மீக குருக்கள், சன்னிதானங்கள் மற்றம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அனைவருக்கும் திருச்நெந்தூர் கோவிலில் அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

READ MORE ABOUT :