பசியை கூட அடக்கிக் கொள்ளலாம்... இப்படிக்கு உங்கள் திருச்செந்தூர் உறவினர் செய்த காரியம்

family-in-tiruchendur-allowed-to-use-their-home-s-toilet-for-woman-and-childrens

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்னதானம்,தங்கும் அறை, கழிவறைகள் அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், பக்தர்கள் சிரமத்தை சந்திக்க கூடும் என்பதால், திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் சங்கரநயினார் என்பவர் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்கள் தங்கள் வீடு கழிவறையை உபயோகித்துக் கொள்ள அனுமதித்துள்ளார். அதன்படி, தனது வீட்டு முன்பு பதாகையும் அச்சடித்து ஒட்டியுள்ளார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தனது வீட்டு கழிவறை செல்லும் பாதையையும் அவர் திறந்து வைத்துள்ளார். பசியை கூட அடக்கிக் கொள்ளலாம், அவசரத்தை அடக்க முடியாது என்பதை உணர்ந்த மணிகண்டனின் செயலுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த புகைப்படம் இணையதிதலும் வைரலாகி வருகிறது.