தூத்துக்குடி வின்பாஸ்ட் தொழிற்சாலை... பணியில் உள்ளூர் மக்களுக்கு 80 சதவிகித வாய்ப்பு ... 200 பேர் முதல் கட்டமாக தேர்வு

thoothukudi-vinfast-factory-80-percent-opportunity-for-locals-in-jobs-200-people-selected-in-the-first-phase

தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்வாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இது 3,500 ஆக உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுக்கு 1.50 லட்சம் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையில், 80% பணியாளர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்தே தேர்வு செய்யப்படுவார்கள்.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஆலை உற்பத்தியை தொடங்கும். அனைத்து மெஷின்களும் பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுதான். கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளும் முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ஆலைக்குள் மெஷின்களை நிறுவும் பணிகளும் முடிந்து விட்டன. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில், ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடியும். இந்திய சந்தையில் முதற்கட்டமாக 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி விஎஃப் 6 (VF 6) மற்றும் விஎஃப் 7 (VF 7) ஆகிய ரக கார்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளளது.

இந்த தொழிற்சாலையின் 80 சதவீத ஊழியர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எஞ்சிய 20 சதவீத ஊழியர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அனுபவம் மிக்க வல்லுனர்களாக இருப்பார்கள். எனவே, தூத்துக்குடி மக்களுக்கு இந்த தொழிற்சாலை உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான் என்றே சொல்லலாம்.